![]() | 2018 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 10, 2018 to அக்டோபர் 11, 2018 சிறந்த வளர்ச்சி மற்றும் வெற்றி (85 / 100)
குரு முழு வேகத்தோடு உங்களுக்கு பல நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் இந்த பெயர்ச்சி காலத்தின் நான்காம் பாகத்தில் தரவிருக்கிறார். மார்ச் 2018 உங்களுக்கு ஏற்பட்ட பினடைவுகளில் இருந்து நீங்கள் முழுமையாக மீண்டு வருவீர்கள். மேலும் உடல் நல பிரச்சனைகளிலும் இருந்து நீங்கள் வெளி வந்து நல்ல அர்ரோகியத்தை காண்பீர்கள். உங்களது மனைவி / கணவனிடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை சுமுகமாக பேசி தீர்ப்பீர்கள். மேலும் உங்கள் இருவருக்குள்ளும் நல்ல உறவு நிலை ஏற்படும். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். உங்களுக்கு குழந்தை பேரும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
திருமணத்திற்கு காத்திற்பவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து சுமுகமாக திருமணம் முடியும். மேலும் நீங்கள் யாரையாவது விரும்புகுரீர்கள் என்றால் அது நீங்கள் எண்ணியது போல திருமணத்தில் முடியும். உங்களது இல்லத்தில் சுப காரியங்கள் நடத்துவீர்கள். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் நல்ல செல்வாக்கும் மதிப்பும் பெறுவீர்கள். உங்களது மனைவி / கணவன் வீட்டாரிடம் நல்ல நட்போடு இருப்பீர்கள். மேலும் உல்லாச பயணம் செல்ல இது ஏற்ற காலமாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை இருந்த பின்னடைவுகளில் இருந்து வெளி வந்து உங்களது வேலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களது வளர்ச்சியை பார்த்து அலுவலகத்தில் இருப்பவர்கள் பொறாமை படுவார்கள். மேலும் உங்களது மறைமுக எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். நீங்கள் வெற்றியை நோக்கி சரியான பாதையில் செல்வீர்கள். உங்களுக்கு விருதுகளும் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் மீண்டும் உங்களது தொழிலில் முன்னேட்ரத்தை காண்பீர்கள். உங்களுக்கு பல புது ப்ரோஜெச்டுகள் கிடைக்கும். அதனால் நீங்கள் உங்களது தொழிலை விரிவு படுத்துவீர்கள். மேலும் நீங்கள் சிறிய அளவில் உங்களது தொழிலை நடத்துவராக இருந்தால் அதை விரிவு படுத்த இது ஏற்ற காலமாகும். உங்களது மகா தசை சாதகமாக இல்லை என்றால், லாபத்தை சரியாக திட்டமிட்டு ரிஸ்க் எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அக்டோபர் 2018 உங்களுக்கு நேரம் அவ்வளவாக சாதகமாக இல்லை. அதனால் லாபத்தில் சேமிப்பை அதிகரிப்பது சில தருணங்களில் கை கொடுக்கும்.
உங்களது நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களது கிரெடிட் கார்டு கடன்களை முற்றிலுமாக அடைத்து விடுவீர்கள். மேலும் புது வீடு வாங்கு உங்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். நீங்கள் புது மனை விழாவை சிறப்பாக கொண்டாடுவீர்கள். முதலீட்டாளர்களுக்கும் பங்கு சந்தை வர்த்தகர்களுக்கும் இது ஒரு லாபம் நிறைந்த காலகட்டமாகும். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் இரண்டும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக் கூடியவையாக இருக்கும். எனினும் அக்டோபர் 2018 முன் உங்களது அணைத்து பங்கு சந்தை வர்த்தகத்தை முடித்து கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic