2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


பங்கு சந்தை மற்றும் முதலீடு இந்த வருடம் அதிர்ஷ்டம் மிக்கதாகவே உள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது உங்களுக்கு எதிர் பார்த்ததை விட அதிக லாபத்தை தரும். நாள் வர்த்தகர்கள் மற்றும் ஊக வர்த்தகர்கள் நல்ல லாபம் சம்பாதிப்பார்கள். நீண்ட காலம் முதலீடு செய்பவர்களும் முழு நேர வர்த்தகர்களும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிக லாபத்தை எதிர் பார்க்கலாம். நீங்கள் தங்கம் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம்.
மேலும் புது வீடு வாங்குவதற்கும் குடி ஏறுவதற்கு இது ஒரு நல்ல காலமாக உள்ளது. நீங்கள் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யலாம். எனிமும் நீங்கள் நிலம் அல்லது அடுக்கு மாடி குடியிருப்பில் முதலீடு செய்யவதாக இருந்தால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். உங்களுக்கு வங்கி கடனும் எளிதில் கிடைக்கும். உங்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்ய விரும்பினால் ஜோதிடரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.


செப்டம்பர் 30 2018ற்கு மேல் பங்கு சந்தை முதலீட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் 2018 காலகட்டங்களில் பெரிய பண இழப்ப ஏற்படக் கூடும்.


Prev Topic

Next Topic