![]() | 2018 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
குரு பகவான் உங்களது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செப்டம்பர் 2018 வரை தொலை தூர பயணம் மேற்கொள்ள இது ஒரு சாதகமான காலமாகவே உள்ளது. தொழில் சம்பந்தமாக அயல் நாட்டிற்கு பயணிப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மேலும் நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு சுற்றுலா பயணம் செல்லவும் இது ஏற்ற காலமாக உள்ளது. நீங்கள் நல்ல ஆரோக்கியதோடும் உற்சாகதோடும் உங்களது பயணத்தை மேற்கொள்ளவீர்கள்.
குடியேற்றம் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்களுக்கு வெளி நாட்டிற்கு செல்ல எளிதில் விசா மற்றும் குடியேற்றம் கிடைக்கும். முக்கியமாக H1B புதுப்பித்தல் சுலபமாக எந்த சிக்கல்களும் இல்லாமல் நடக்கும். நீங்கள் அமெரிக்க, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிரந்தர குடி உரிமைக்காக விண்ணப்பித்திருந்தால், அது எளிதில் ஒப்புதல் பெரும். மேலும் நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு வெளிநாட்டில் குடியேறவும் வாய்ப்பு கிடைக்கும். அக்டோபர் 2018ற்கு மேல் தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic