2018 புத்தாண்டு உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

உத்தியோகம்


குரு 5ஆம் வீட்டிற்கு சஞ்சரிப்பதால், பல மகிழ்விக்கும் செய்திகள் இந்த 2018ஆம் ஆண்டு .
உங்களை தேடி வரும். மேலும் பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைத்து நீங்கள் உத்யோகத்தில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்தபடியே வேலை கிடைப்பதற்கு இது ஏற்ற காலம். நீங்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெற்று பெரிய கம்பெனிகளில் நல்ல சம்பளத்தோடு வேலைக்கு சேர இந்த பெயர்ச்சி காலம் ஏற்றதாக உள்ளது. அதுமட்டும் இல்லமால் நீங்கள் எதிர் பார்த்த இடத்திலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் வெளி நாட்டில் பனி புரிய காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் குருவின் பலத்தால் எதிர் பார்த்த வாய்ப்பை கொண்டு வரும். நீண்ட காலமாக ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்காக காத்திருந்திருந்தவர்களுக்கு தற்போது தாமதம் இன்றி எதிர் பார்த்த பலன்கள் கிடைக்கும்.



உங்களது மேலாளரும் உடன் வலை பார்ப்பவர்களும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உங்களது கடின உழைப்பை அவர்கள் மதித்து அதற்க்கு தக்க சன்மானமும் ஊதிய உயர்வையும் கொடுப்பார்கள். மேலும் உங்களது மகா தசை நல்ல நிலையில் இருக்கின்றது என்றால் உங்களுக்கு உயர் பதவி பெறுவதற்கும் இந்த குரு பெயர்ச்சி காலம் மிக சாதகமாக உள்ளது. ஒப்பந்த ரீதியில் வேலை பார்ப்பவர்களுக்கு உங்களது பனி நிரந்தரமாகவும் இந்த காலம் சாதகமாக உள்ளது.
வெளிநாட்டிற்கு வேலை தேடுபவர்களுக்கு சுலபமாக விசா மற்றும் குடியேற்றம் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனினும் நவம்பர் 2018ற்கு மேல் உங்கள் உத்தியோக வளர்ச்சி குறையும். நவம்பர் மற்றும் டிசம்பர் 2018 ஆகிய காலகட்டங்களில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதை தவிர்க்கவும்.





Prev Topic

Next Topic