![]() | 2018 புத்தாண்டு தொழில் மற்றும் வேற்று வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
இந்த 2018ஆம் ஆண்டு உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், ஆர்வம் இன்மை காரணமாகவும் மற்றும் சொந்த பிரச்சனைகளாலும் நீங்கள் அதனை இழக்க கூடும்.
உங்களது மேல் பார்வை இல்லை என்றால் தொழில் அல்லது வேலை இடத்தில வேலை சரியாக நடக்காது. உங்களது போட்டியாளர்கள் இதனை சாதகமாக எடுத்து கொண்டு உங்களை தோற்கடிக்க நினைப்பார்கள். இதனால் நீங்கள் உங்களது நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம். நல்ல செய்தி என்னவென்றால் சனி பகவான் நீங்கள் தொழிலில் தொடர்ந்து இருக்க உதவி செய்வார். எனினும் நீங்கள் அதிக நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
வங்கி கடன் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். உங்களது புது யோசனைகளை அங்கீகரிக்க புது முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்குமாறு அழுத்தம் கொடுப்பார்கள். மேலும் அதிக வட்டியும் கேட்பார்கள். இதனால் நீங்கள் அதிக நிதி பற்றாக்குறைக்கு ஆளாவீர்கள். நீங்கள் புது ஒப்பந்தங்கள் செய்வதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இதனால் உங்களது தொழிலில் சில சட்ட சிக்கல்கள் வரக் கூடும்.
சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் உங்களது செல்வாக்கை தக்க வைத்து கொண்டாலும், அதனால் உங்களுக்கு லாபம் கிடைப்பதில் பெரிதும் உதவாது. உங்களது செலவுகள் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic