2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

கல்வி


கடந்த ஆண்டு மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தோடும் அக்கறையோடும் படித்து வந்திருப்பீர்கள் . ஆனால் இந்த ஆண்டு உங்களுக்கு சற்று சோதனை மிக்கதாக இருக்கும். மேலும் சில உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் காதல் வயப்படவும் கூடும். எனினும் அதனை வெளிப்படுத்த சற்று பயப்படுவார்கள். மேலும் நீங்கள் துணிந்து உங்களது விருப்பத்தை கூறினாலும் அது வெற்றிபெறுவது சற்று சந்தேகமே.
உங்களது பதற்றமும் தனிப்பட்ட உணர்வுகளும் உங்களை படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுக்கும். இதனால் நீங்கள் பரிச்சைக்கு அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முக்கியமாக நீங்கள் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்/மாணவியாக இருப்பவராக இருந்தால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன்படி நடந்து கொள்வது உத்தமம். மேலும் நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்றால், அது மேலும் உங்களது படிப்பை பாதிக்கும். அதானால் நீங்கள் உங்களது குடும்பத்தினர் ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்வது சில சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும்.




Prev Topic

Next Topic