![]() | 2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த 2018ஆம் ஆண்டு உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருப்பதால் உங்களது குடும்பத்தினரோடு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.இதனால் குடும்பத்தினரோடு தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கியமாக உங்களது கணவன்/மனைவி, அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் உங்களது பெற்றோர்களிடம் தேவை அற்ற வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். முடிந்த அளவிற்கு அவர்களை புரிந்து நடந்துக் கொள்ளவும்.
உங்களிடத்தில் அதிக நெருக்கத்துடன் இருப்பவர்கள் உங்களுக்கு சில பிரச்சனைகளை தரக்கூடும். இது முக்கியமாக அவர்கள் உங்கள் மீது அதிக உரிமையோடு இருப்பதனால் கூட வரலாம். எனினும் நீங்கள் அதிக பொறுமையுடனும் சாதூர்யத்துடம் செயல் பட வேண்டும்.
6ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் கேது உங்களது குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடு பட அதிகம் உதவுவார். இதனால் குடும்பத்தில் நிலவவிருக்கும் பிரச்சனைகள் குறையும். எனினும் உங்களுக்கு திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுக்கு வரன் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை. எனினும், அவர்கள் தேர்ந்தெடுத்த துணையை உங்களிடம் காட்டி திருமணத்திற்கு ஒப்புதல் கேட்க கூடும்.
நீங்கள் ஏதேனும் விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் உள்ளீர்கள் என்றால், எதிர் பார்த்த தீர்ப்பு கிடைப்பதற்கு இது ஏற்ற காலம் இல்லை. மேலும் நீங்கள் ஜீவனாம்சம் தரவும் நேரிடலாம். இது உங்களுக்கு நிதியில் அழுத்தத்தை தரக் கூடும்.
Prev Topic
Next Topic