2018 புத்தாண்டு நிதி/ பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

நிதி/ பணம்


இந்த 2018ஆம் வருடம் உங்கள் நிதி நிலை சற்று சாதகமற்ற நிலையிலேயே இருக்கும். உங்களது வருமானம் நிலையாக இருந்தாலும் உங்களது தேவை அதிகரிக்கும். உங்களது சேமிப்பு விரைவாக குறையும். இதனால் நீங்கள் கடன் வாங்கவும் நேரலாம். எனினும் பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
உங்களுக்கு வங்கி கடன் கிடைத்தாலும் அது எதிர்பார்த்த அளவு இருக்காது. மேலும் தங்க நகைகள் வாங்க இது ஏற்ற காலம் இல்லை. உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் பணத் தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் உங்களது சொத்துக்கள் ஏதேனும் விருக்கவும் நேரலாம்.



மேலும் லாட்டரி போன்ற விசயங்களில் உங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்க இது ஏற்ற காலமும் இல்லை. முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்கவும். மேலும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். அது சம்பந்தமாக எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் அதிக பொறுமையாக இருந்து சிந்தித்து செயல் பட வேண்டும்.




Prev Topic

Next Topic