![]() | 2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 11, 2018 - டிசம்பர் 31, 2018 சோதனையான காலம் (40 / 100)
குரு பகவான் அக்டோபர் Oct 11, 2018-ல் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். சனி பகவான் உங்களது ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்கள் நிகழ கூடும். நீங்கள் அதிக நாட்கள் தூக்கம் இன்றி தவிப்பீர்கள். மேலும் உங்களது மனைவி / கணவனிடத்தில் கருத்து வேறுபாட்டால் சண்டைகள் வரக் கூடும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், பொறுமையாக இல்லை என்றால் தற்காலிகமாக உங்களது மனைவி / கணவனை விட்டு பிரிய நேரலாம். மேலும் நீங்கள் விவாகரத்து, குழந்தை வழக்கு மற்றும் ஜீவனாம்சம் அல்லது சொத்து சம்பந்தமான வழக்குகள் எதிலேனும் உள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பது சந்தேகமே. தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும். சிவன் வழிபாடு செய்வது உங்களது மன பலத்தை அதிகரிக்கும். எனினும் வரும் அக்டோபர் 2018ற்கு மேல் உங்களது வாழ்க்கையில் சற்று சூழல்கள் நல்லபடியாக மாறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வரும் அக்டோபர் 2018ற்கு மேல் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். உங்களுக்கு திறமைக்கேற்ற பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உங்களது திறமையை நிரூபிக்க இது தக்க தருணம் ஆகும். எனினும் நீங்கள் சில சொந்த விசயங்களால் மேலும் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டியதிருப்பதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பீர்கள். இதனால் நீங்கள் உங்களது உத்யோகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு ஒரு கலவையான பலன்கள் கிடைக்கும். எனினும் உங்களது ஜென்ம ஜாதகத்தின் பலனால் நீங்கள் மெதுவாக வளர்ச்சியை காண்பீர்கள்.
உங்களது நிதி நிலை பொறுத்த வரைக்கும் பெரிதான முன்னேற்றம் ஏதும் இருக்காது. உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் கிடைப்பது கடினமே. மேலும் உங்களது செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு குறையும். இதனால் நீங்கள் சில தருணங்களில் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். இந்த சமயத்தில் எந்த ஒரு முதலீடும் செய்யாதிருப்பது நல்லது.
Prev Topic
Next Topic