![]() | 2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
இந்த 2018ல் உங்களது உடல் நலத்தில் முன்னேற்றத்தை கண்டாலும், சில சொந்த பிரச்சனைகளால் நீங்கள் மனதளவில் சற்று அழுத்தத்துடனும் படபடப்புடனும் இருப்பீர்கள். முக்கியம்மாக உங்களது பெற்றோர்கள், வாழ்க்கை துணைவர், குழந்தைகள், மற்றும் நண்பர்கள் மூலவமாக பிரச்சனைகள் வரக்கூடும். உங்களது மகா தசை பாலவீனமாக இருந்தால் நீங்கள் மன குழப்பம், மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடனும் காணப்படுவீர்கள்.
இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் நீங்கள் உங்களது நடப்பு வட்டாரத்தில் அதிக கவனத்துடன் பழக வேண்டும். ஒரு வேலை நீங்கள் தவறான நட்பு வட்டாரத்தில் சிக்கி கொண்டுளீர்கள் என்றால் அவர்கள் உங்களை தவறான பழக்கத்திற்கு அல்லது தவறான வழிகளில் வழி நடத்தக் கூடும். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகக் கூடும். தேவை பட்டாள் ஒரு நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது உங்களை நல்வழி படுத்த உதவும். மேலும் மனதளவில் நீங்கள் தெளிவாகவும் செயல் பட இது உதவும்.
அயல் நாட்டில் வசிப்பவர்கள் அல்லது குடும்பத்தை விட்டு தொலை தூரத்தில் வசிப்பவர்கள் தனிமையாக உணருவார்கள். இதனால் உங்களது மன அழுத்தம் அதிகரிக்க கூடும். எனினும், நல்ல நண்பர்களிடம் அல்லது குடும்பத்தினரிடம்,உங்களது எண்ணங்களை பகிர்ந்துக்க கொள்ளவது ஆறுதலாக இருக்கும். தினமும் ஹனுமன் சாலிசா மற்றும் சுதர்சன மஹா மந்திரமும் கேட்டு வருவது உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும்.
Prev Topic
Next Topic