2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

காதல்


குரு உங்கள் ராசியின் 3ஆம் மற்றும் 4ஆம் வீட்டிலும் சனி 5ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பல பின்னடைவுகளை உங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்படுத்த கூடும். நீங்கள் யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால், இந்த 2018ஆம் வருடம் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். மேலும் உங்களுக்கு ஏற்கனவே துணை உள்ளது என்றால், அவர்கள் உங்கள் மீது அதிக உரிமையோடு இருக்கக் கூடும். இது சில சிக்கல்களை உண்டாக்கலாம். முக்கியமாக உங்கள் இருவருக்கும் இடையே புதிய நண்பர் எவரேனும் அறிமுகமானானள் பிரச்சனைகள் அதிகரிக்க கூடும். அதனால் நீங்கள் அதிக பொறுமையோடும், அமைதியாகவும் இருக்க வேண்டும். மேலும் உங்களது துணையை புரிந்து கொண்டு நடப்பது உத்தமம். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தாள் உங்களுக்கு இடையே வாக்குவாதங்களை அதிகரித்து நீங்கள் தற்காலிகமாக பிரியக் கூடும்.
நீங்கள் யாரிடமாவது காதல் வயப் பட்டிருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் புதிதாக யாரையும் அணுகுவது இந்த பெயர்ச்சி காலத்தில் எதிர் பார்த்த பலனை தராது. அப்படி நீங்கள் முயற்சித்தால் அவர்கள் உங்களுடன் பழகும் காலத்தை ஒரு பொழுது பூக்காகவே நினைத்து உங்களை விட்டு சென்று விடுவார்கள். இதனால் நீங்கள் அவமானம் படவும் நேரிடலாம். அதற்க்கு நீங்கள் யாரிடமும் உங்களது விருப்பத்தை கூறாமல் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.


உங்களது மனதில் பல தேவை அற்ற சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றலாம். மேலும் தவறானவரை நோக்கி உங்களது சிந்தனை செல்லலாம். மேலும் நீங்கள் உணர்ச்சிவசப் படவும் கூடும். திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற முயற்சித்தால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன்படி முடிவெடுப்பது உத்தமம். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் ஒற்றையாக இருப்பது நல்லது. இது தேவையற்ற பல பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும்.



Prev Topic

Next Topic