2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


2017 ஆம் ஆண்டு குரு உங்கள் ராசியின் 2ஆம் மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் கலவையான பலன்களை பெற்றிருப்பீர்கள். எனினும், குரு தொடர்ந்து 3ஆம் வீட்டில் வரும் அக்டோபர் 11, 2018 வரை சஞ்சரிப்பதால் இந்த வருடம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். இதனால் உங்களது வாழ்க்கையில் பல சோதனைகளையும் தடைகளையும் நீங்கள் சந்திக்க நேரலாம். மேலும் சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிதாக எந்த ஒரு பலன்களையும் எதிர் பார்க்க முடியாது. இருப்பினும், நிகழும் குருபெயர்ச்சி காலகட்டத்தில், ராகுவும் கேதுவும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு சற்று ஆறுதல் நிறைந்த காலமாக இருக்கும். உங்களது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் இது நாள் வரை இருந்த வைத்திய செலவுகள் குறையத் தொடங்கும்.


இருப்பினும், உங்களது குடும்பம் மற்றும் சொந்த விசயங்களில் சில பிரச்சனைகள் வரக்கூடும். இதனால் நீங்கள் சற்று பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப் படுவீர்கள். நிதி மற்றும் வருமானம் பொறுத்தவரையில் அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே உள்ளது. மேலும் உங்களது செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும். இந்த 2018ல் உங்களது குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் உத்தியோகத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எந்த ஒரு முக்கியமான முடிவுகளும் எடுப்பதற்கு முன் உங்கள் ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் பலன் பொறுத்து செய்வது நல்லது.



Prev Topic

Next Topic