2018 புத்தாண்டு வேலை/ உத்யோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வேலை/ உத்யோகம்


குரு உங்களது 3ஆம் வீட்டில் அக்டோபர் 11, 2018 வரை சஞ்சரிப்பார். இதனால் உங்கள் வேலை முன்னேற்றத்தில் சில தடைகளை காண நேரலாம். மேலும் சனி 5ஆம் வீட்டிற்கு பெயர்வதால், உங்களக்கு உங்களது உத்யோகம், மற்றும் குடும்பத்தை கவனித்து கொள்ள போதுமான அளவு நேரம் இல்லாமல் இருக்கும். இதனால், உங்களது வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரக் கூடும்.
உங்களது வேளையில் அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் நேரத்திற்கு கொடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதி படுவீர்கள். இது உங்களது செல்வாக்கை பாதிக்க கூடும். இதனால், உங்களது பலவீனமான நேரத்தை சாதகமாக எடுத்து கொண்டு உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் உயர முயல்வார்கள்.
உங்கள் உத்தியோகத்திலும் முன்னேற்றத்திலும் அதிக கவனம் செலுத்த ஆர்வம் இன்றி காணப் படுவீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் அலுவலகத்தில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடலாம். நீங்கள் உங்களுடன் வேலை புரிபவர்களை பற்றி உங்களது முதலாளியிடமோ அல்லது மேலாளரிடமோ புகார் கூற நினைத்தால் அது உங்களுக்கே திரும்பிவிடும். அதனால் முடிந்த அளவில் பொறுமையாக செயல் படுவது உத்தமம். மேலும் உங்களது உத்யோகத்தில் ஊதிய உயர்வோ அல்லது பதவி உயர்வோ எதிர்பார்க்க இது தக்க காலகட்டம் இல்லை. மேலும் உங்கள் உத்தியோகத்திலும் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.


நீங்கள் தற்காலிகமாக பணி புரிபவராக இருந்தால், நிரந்தரம் பெற சற்று தாமதமாகும். நீங்கள் அதற்காக காத்திருக்க வேண்டியதிருக்கும். மேலும் அரசு வேலை கிடைப்பது சற்று சந்தேகமே. உங்களது அலுவலகத்தில் எவரிடமும் நெருக்கமாக பழகாமல் இருப்பது நல்லது. உங்களது சொந்த அல்லது குடும்ப விசயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில், உங்களுக்கே தெரியாமல் இதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடும். பிறர் உங்களை பற்றி தேவையற்ற வதந்தியை பரப்பக்கூடும். இது உங்களது நட்பு வட்டாரத்ததை மிகவும் பாதிக்கும். மேலும் இதனால் தேவை இல்லாத பிரச்சனைகளும் உங்களது சொந்த வாழ்க்கையில் வரக் கூடும்.



Prev Topic

Next Topic