2018 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


கடந்த சில ஆண்டுகள் தொழிலதிபர்களுக்கு சனி பகவான் பல இன்னல்களை தந்திருக்க கூடும். குறிப்பாக நிதி நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இருந்திருக்காது. எனினும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நீங்கள் வெற்றியை காண்பீர்கள். நீண்ட கால முதலீடு கொண்டு ஏதேனும் தொழில் தொடங்க உள்ளீர்கள் என்றால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் தொடங்கலாம். எனினும் செப்டம்பர் 2018 வரை நீங்கள் எந்த ஒரு பெரிய வளர்ச்சியையும் லாபத்தையும் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் உங்களது தொழிலை இருக்கும் நிதியை கொண்டே சமாளிக்க வேண்டும். எனினும் நீங்கள் அதிகம் அனுபவத்தை கற்றுருப்பீர்கள். இது உங்களது நிர்வாக திறமையை வளர்க்க உதவும்.
நீங்கள் ஆகஸ்ட் 2018ற்கு முன் அதிக வளர்ச்சியையும் லாபத்தையும் எதிர் பார்த்தல், சிறிது ஏமாற்றமே மிஞ்சும். எனிமும் பொறுமையாக இருப்பது நல்லது. மேலும் புது முதலீடு அல்லது முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. அதுமட்டும் அல்லாது புதிதாக பணி ஆட்கள் நியமனம் செய்யவதையும் குறைத்துக் கொள்வது நல்லது. உங்களது புது முயற்சியால் அல்லது ஏற்கனவே ஈடுபட்டுள்ள ப்ரொஜெக்ட்டுகள் ஏதேனும் இருந்தால் அதை சரியாக செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் எழலாம். மேலும் இதனால் ஆகஸ்ட் 2018 வரை உங்களது முக்கியமான வாடிக்கையாளர்களை இல்லக்கவும் நேரலாம். ஆதலால் அதிக கவனம் தேவை.


நீங்கள் கூட்டு தொழிலில் ஈடுபட்டிருந்தால், உங்களது பங்குதாரர் ஏதேனும் பிரச்சனை செய்யக் கூடும் எனினும் அத்தகைய பிரச்சனைகள் அக்டோபர் மற்றும் டிசம்பர் 2018ற்குள் சரியாகிவிடும். மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் நவம்பர் 2018 மாதங்களில் பண வரத்து அதிகமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மாற்று கமிஷன் ஏஜெண்டுகள் இந்த 2018ஆம் வருடத்தின் இறுதி பகுதியில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள்.



Prev Topic

Next Topic