![]() | 2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குரு உங்கள் ராசியின் ஜென்ம ஸ்தானத்தில் அக்டோபர் 2018ல் சஞ்சரிக்க உள்ளதால் சில கசப்பான அனுபவங்களையும் சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். இது உங்களது குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதிக்க கூடும். நீங்கள் பல சவால்களையும் சந்திக்க நேரிடலாம். உங்களது வாழ்க்கை துணைவர், குழந்தைகள் மற்றும் மாமனார் மாமியார் வீட்டினருடன் சில சிக்கல்ககளை சந்திக்க நேரலாம்.
உங்கள் குழந்தைகள் சில கெட்ட செய்திகளை கொண்டுவரலாம். இது உங்களது மனதை பெரிதும் பாதிக்க கூடும். மேலும் நீங்கள் உங்கள் உறவுகளிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளலாம். இது உங்கள் நிம்மதியை பெரிதும் பாதிக்கும்.
நீங்கள் உங்களது மகள் அல்லது மகனுக்கு வரன் தேடுகுறீர்கள் என்றால், அது தேவையற்ற காரணங்களால் தள்ளிப் போகலாம். எனினும் பிற்பாடு நீங்கள் அது உங்களது மறைமுக எதிரியால் தான் தடை பட்டது என்பதை உணருவீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருக்குமெனில், அத்தகைய சுப காரியங்கள் நிற்கவும் வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தலாம். உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி சுப காரியங்கள் நடத்துவது உத்தமம். அல்லது சில நாட்களுக்கு அதை தள்ளி போடலாம்.
உங்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டதால் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நல்ல முன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். இந்த மாதங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். மொத்தத்தில் இந்த வருடத்தின் கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. இந்த காலகட்டத்தில் சுப காரியம் நிகழ்த்தலாம்.
Prev Topic
Next Topic