![]() | 2018 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
உங்களது செலவுகளில் அதிக கவனம் தேவை. அதிகம் யோசித்து நிதி அல்லது செலவுகள் குறித்த முடிவுகளை எடுப்பது உத்தமம். ஜென்ம குரு செப்டம்பர் 2018 வரை உங்களது நிதி நிலையை பெரிதும் பாதிக்க கூடும். எனிமும் சனியன் பலத்தால் உங்களது வருமானம் சீராக இருக்கும். எனிமும் உங்களது செலவுகள் கட்டுப்பாட்டை மீறி செல்லும். பயணம், மருத்தவம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற விசயங்களில் உங்களது சேலவுகள் அதிகரிக்கும். நீங்கள் உங்களது செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் கடன் வாங்கி உங்களது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். அதனால், உங்களது கிரெடிட் கார்டு போன்றவற்றின் மீது சிறிது கட்டுப்பாட்டுடன் இருப்பது புத்திசாலித்தனமாகும்.
வங்கி கடன் அதிக வட்டிக்கு ஒப்புதல் பெரும். நீங்கள் உங்களது கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டியது இருக்கும். முடிந்த அளவிற்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க ஷுரிட்டி கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் அதற்க்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் சூழல் ஏற்படலாம்.
அக்டோபர் 2018ற்கு மேல் உங்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி மறு பரிசீலனை செய்வதால் வட்டி விகிதம் குறையும். உங்களுக்கு போதுமான பண வரத்து ஏற்படும், இதனால் உங்கள் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதாலும், பெருமாளை வணங்குவதாலும் நிதி நிலையில் வெற்றி காணலாம்.
Prev Topic
Next Topic