![]() | 2018 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | முதல் பாகம் |
ஜனவரி 1, 2018 முதல் மார்ச் 09, 2018 வரை - கலவையான பலன்கள் (50 / 100)
சனி பகவான் 3ஆம் வீட்டிலும், குரு பகவான் உங்களது 1ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், உங்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். நீங்கள் ஒரு நல்ல லாபகரமான சூழலை பார்க்க வேண்டுமானால் நீண்ட கால ப்ரோஜெக்டுகளில் வேலை பார்க்க வேண்டும். அது கண்டிப்பாக அடுத்த 18 மாதங்களில் உங்களுக்கு ஒரு லாபகரமான மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த பலன்களை கொண்டு வரும். எனினும் நீங்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு பலனை எதிர் பார்த்தால் அது ஏமாற்றத்தை உங்களுக்கு தரும். ஜென்ம குருவின் தாக்கத்தை நீங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் காண்பீர்கள். எனினும் சனி உங்களுக்கு ஒரு நீண்ட கால வெற்றியை கொடுப்பார், இருந்தாலும் சிறு சிறு தோல்விகளையும் நீங்கள் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்.
உங்களது உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களது எதிர்ப்பு சக்தி குறையக் கூடும். அதனால் உங்களுக்கு விரைவில் சில நோய் அல்லது உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களது மனைவி / கனவன் உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடத்தில் சண்டை போடக் கூடும். நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால் இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் தற்காலிகமாக உங்களது மனைவி / கணவனிடத்தில் இருந்து பிரிய கூடும். எனினும் சனி உங்களது ராசியில் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் பொறுமையோடு சிந்தித்து செயல் பட்டு இந்த காலகட்டத்தை அமைதியாக கடந்து வருவீர்கள்.
பெரிய கம்பனிகளில் இருந்து உங்களுக்கு எதிர் பார்த்த நல்ல வேலை கிடைக்கும். எனினும் சம்பளமும் பதவியும் எதிர் பார்த்த படி இருக்காது. இருப்பினும் நீங்கள் சேரும் கம்பெனி புகழ் பெற்றதும் மற்றும் செல்வாக்கும் நிறைந்ததாக இருந்தால் நீங்கள் தைரியமாக சேரலாம். ஏனென்றால் அங்கு உங்களது அடிப்படை சம்பளத்தை விட மற்ற ஊக்க தொகை அதிகம் கிடைக்கும். இருப்பினும் அலுவலகத்தில் நிகழும் வேலை சுமையை நீங்கள் சாமாளிக்க வேண்டும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு சில பிரச்சனைகளையும் தரக் கூடும். கவனம் தேவை.
உங்களது வருமானம் சீராக இருக்கும். எனினும் செலவுகள் அதிகரிக்க கூடும். இருக்கும் கடன்கள் உங்களுக்கு அழுத்தத்தை தரக் கூடும். அதனால் நீங்கள் அசலை விட அதிகம் வட்டி கட்ட வேண்டியதிருக்கும். உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து சிந்தித்து அதன் படி செயல் பட்டால் ஓரளவுக்கு இந்த சிக்கல் மிகுந்த சூழலில் இருந்து நீங்கள் வெளி வரலாம். இந்த இரண்டாம் பாக காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீட்டை தவிர்க்கவும். இருப்பினும் உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் கவனித்து செயல்படலாம்.
Prev Topic
Next Topic