![]() | 2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரை - பொன்னான கால கட்டம் (85 / 100)
குரு பகவான் வரும் அக்டோபர் 11, 2018 அன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் உங்களது ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க சூழலை தரக் கூடும். உங்கள் மனமும் உடலும் நேர்மறை சக்திகளால் நிறைந்திருக்கும். நீங்கள் குடும்பத்தினர்களை புரிந்து கொண்டு குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவும். மேலும் திருமணம் ஆனவர்கள் அன்யுநியத்தோடு இருப்பார்கள். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறப்பதால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணம் செய்ய இது ஏற்ற காலகட்டமாகும்.
நீங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள். உங்களது சம்பள உயர்வும் சன்மானமும் உங்களை மகிழ்விக்கும். மேலும் உங்களுக்கு போதுமான பண வரவு கிடைத்து விரைவாக கடன்களை அடைப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல அதிர்ஷ்டம் மிக்க சூழலை தொழிலில் காண்பீர்கள். உங்களுக்கு எதிர் பாராத லாபம் கிடைக்கும். மேலும் வெளி நாட்டிற்கு செல்ல முயற்சிப்பர்களுக்கு எளிதாக விசா கிடைக்கும். மேலும் வெளி நாட்டில் குடியேற்றம் செய்வது உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
ஊக வர்த்தகம் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். மேலும் நீங்கள் புது வீடு வாங்கும் பாக்கியமும் கிடக்கும். நீங்கள் புது மனை புகு விழாவை மகிழ்ச்சியோடு நிகழ்த்துவீர்கள்.
Prev Topic
Next Topic