2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

காதல்


இந்த 2018 புது வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் பல சோதனைகளை சந்திக்க நேரலாம். உங்களது உறவில் சில பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் அதிக பொறுமையாகவும் கவனத்துடனும் செயல் பட வேண்டும். சில மன வேறுபாடுகளும் உங்களுக்கு மத்தியில் தோன்றலாம்.
முக்கியமாக உங்களது பெற்றோர்களுக்கு உங்களது காதல்/விருப்பத்தை பற்றி தெரிய வந்தால் அதற்கான ஒப்புதல் பெறுவது பெரும் கடினமான விடயமாகும். மேலும் இரு குடும்பத்தினருக்கும் சன்டையையும் குழப்பத்தையும் உருவாக்கக் கூடும். மேலும் அனைவரது மன நிம்மதியும் கெடும். நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால், ஒரு வருடத்திற்கு காத்திருந்து பின் அதற்கான முயற்சியை எடுக்கலாம்.


மேலும் நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்களிடத்தில் உங்களது விருப்பத்தை கூறுவதற்கு இது ஏற்று காலகட்டமல்ல. மீறி கூற முயன்றால் அவர்கள் உங்களை அவமானப்படுத்தக் கூடும். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் கடினமான காலத்தை கடக்க வேண்டும். நீங்கள் உங்களது நண்பர்களுக்கு மத்தியில் அவமானப் படக் கூடும். இது உங்களை மனதளவில் அதிகம் பாதிக்க கூடும்.
நீங்கள் புதிதாக திருமணம் மாணவராக இருந்தால் சில மன வேறுபாடுகள் உங்களது கணவன்/மனைவிக்கு மத்தியில் ஏற்படலாம். ஜனவரி, பெப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2018 மாதங்களில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க கூடும். நீங்கள் தற்காலிகமாக உங்கள் மனைவி / கணவனை விட்டு பிரிந்து இருக்கு நேரிடலாம். எனினும் அக்டோபர் 2018ற்கு மேல் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.



Prev Topic

Next Topic