![]() | 2018 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 09, 2018 முதல் ஜூலை 10, 2018 வரை - நல்ல நேரம் (75 / 100)
நீங்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். உங்களது நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும். மேலும் நீங்கள் உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களது குடும்பத்தினர்களோடு ஏதேனும் பிரச்சனைகளில் இருந்தீர்கள் என்றால், அது தீர்ந்து தற்போது அவர்களுடன் நீங்கள் நல்ல உறவு நிலையில் இருப்பீர்கள். உங்களது மனைவி / கணவன் உங்களை நன்கு புரிந்து கொண்டு உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களது குழந்தைகளும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் தற்போது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க கூடும்.
குரு பெயர்ச்சியின் இந்த காலக்கட்டம் உங்களுக்கு மிக சாதகமாக இருக்கின்றது. நீங்கள் உங்களது வீட்டில் சுப காரியங்கள் செய்யலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணம் எதிர்பார்த்த படி நடக்கும். எனினும் வரும் அக்டோபர் 2018க்குள் திருமணத்தை நடத்த முயற்சியுங்கள். காதலர்கள் நல்ல உறவு நிலையிலும் நல்ல புரிதலோடும் இருப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுணியமாக வாழ்வார்கள். நீங்கள் பெண் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி திருமணம் அல்லது குழந்தை பேருக்கு முயற்ச்சிக்கலாம்.
வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும். நீங்கள் புது வேலைக்கு முயற்ச்சித்தால் அது உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு எதிர் பார்த்த பதவியும் கிடைக்கும். உங்களது வேலை சுமை குறையும். மேலும் பதற்றமும் குறையும். நீங்கள் உங்களது வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை நன்கு சமாளிப்பீர்கள். மேலும் உங்களது குடும்பதினர்களோடு நீங்கள் அதிக நேரம் செலவிடுவதால் நல்ல சூழல் நிலவும். இதனால் இது வரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் நல்ல தீர்வு காண்பீர்கள்.
தொழிலதிபர்கள் ஒரு நல்ல முநேற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கு பல சிறு ப்ரோஜெக்ட்டுகள் கிடக்க கூடும். அதனால் உங்களது பண வரத்து அதிகரிக்கும். மேலும் நீங்கள் தொடர்ந்து உங்களது தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். உங்களுக்கு விசா மற்றும் குடியேற்றம் குறித்த முயற்ச்சிகள் வெற்றிகரமாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியா, அமெரிக்க மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முயற்சியும் வெற்றி பெரும்.
உங்களது வருமானம் சீராக இருக்கும். அதனால் நீங்கள் உங்களது கடன்களை விரைவாக அடைப்பீர்கள். மேலும் மறு நிதியாக்கதின் மூல்வமாக உங்களது கடன் சுமையை நீங்கள் குறைக்க முயற்ச்சிக்கலாம். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் உங்களது நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அதனால் நீங்கள் உங்களது கடன் சுமைகள் மேலும் குறையக் கூடும்.
வர்த்தகர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாகும். நீங்கள் தற்போது நல்ல லாபத்தை காண்பீர்கள். எனினும் ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டம். தேவையற்ற ரிஸ்க் எடுக்க வேண்டாம். உங்களிடம் அதை பணம் முதலீடு செய்வதர்க்க் இருந்தாலும், பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. அது எதிர் பாராத நட்டத்தை ஏற்படுத்த கூடும். ரியல் ஈஸ்டட்டில் முதலீடு செய்ய நினைத்தால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் பின் முதலீடு செய்வது உத்தமம்.
Prev Topic
Next Topic