2018 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

ஜூலை 10, 2018 முதல் Oct 11, 2018 வரை - தனிப்பட்ட மற்றும் நிதி சிக்கல்கள் (40 / 100)


கடந்த நான்கு மாதங்கள் உங்களுக்கு ஓரளவிற்கு சாதகமாக இருந்திருக்கும். அதனால் நீங்கள உங்களது வாழ்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை கண்டிருப்பீர்கள். எனினும் தற்போது ஜென்ம குரு உங்களுக்கு சில சங்கடங்களை தரக் கூடும். அதனால் நீங்கள் சாதகமற்ற விளைவுகளை சந்திக்க நேரலாம். உங்களது வேலை சுமையால் நீங்கள் அதிகம் சோர்ந்து போவீர்கள். மேலும் குடிம்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகள் உங்களுக்கு மன உளைச்சலை தரக் கூடும். அது உங்களை மனதளவில் பெரிதும் பாதிக்கலாம். நீங்கள் தூக்கம் இல்லாமல் பல இரவுகள் அவதிப் படக் கூடும். தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் ஓரளவிற்கு சூழ்நிலைகள் ஆதரவாக இருக்கும். கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்வதால் உங்களது பலமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சனி உங்களது ராசியில் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பிரச்சனைகள் உங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் இருக்குறீர்கள் என்றால் அதை செப்டம்பர் 2018 வரை தள்ளிப் போடுவது உத்தமம். அதன் பின் முயற்சிப்பது உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க உதவும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் செய்வதை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலை சுமை அதிகரிக்கும். நீங்கள் உங்களது வேலை சுமையை சமாளித்தாலும் அலுவலகத்தில் நிகளும் அரசியலால் நீங்கள் ஓர் கடினமான காலகட்டத்தை கடக்க வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் உயர்வு மற்றும் சம்பள உயர்வு எதிர் பார்த்தது போல் கிடைப்பது சந்தேகமே. அது உங்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கலாம். தொழிலதிபர்களுக்கு இது ஒரு இறக்கம் தரக்கூடிய காலம். நீங்கள் அதிக அளவில் நிதி பிரச்சனையில் சிக்கலாம். மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுப்பவர்கள் உங்களுக்கு உதவாமல் போகலாம். அதனால் உங்களது பண வரத்து தொழில் செய்வதற்கு போதுமான அளவு இல்லாமல் போகலாம். எனினும் இந்த சூழல் வரும் செப்டம்பர் 2018 மேல் கண்டிப்பாக நல்ல விதமாக மாறும். நீங்கள் பல நல்ல மாற்றங்களை காணலாம்.
உங்களது செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்புகள் குறையும். உங்களது கடனுக்கு அதிக அளவில் வட்டி கட்ட வேண்டிய சூழல் எல்லாம். மேலும் ஜென்ம குரு சஞ்சரிப்பதால் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபடுவது உத்தமம் இல்லை. ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நட்டத்தை எதிர் கொள்ள நேரலாம். அதனால் அடுத்த குரு பெயர்ச்சி வரும் வரையில் பங்கு சந்தையில் எந்த ஒரு முதலீடும் செய்யாதிருப்பது உத்தமம். அவ்வாறு செய்தால் நீங்கள் நிச்சயம் பெரிய நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். இது உங்களது கடன்களை அதிகரிக்கும். ரியல் எஸ்டட்டில் முதலீடு செய்ய விரும்பினால் செப்டம்பர் 2018 மேல் செய்வது நல்லது.




Prev Topic

Next Topic