2018 புத்தாண்டு பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


ஜென்ம குரு உங்களை வெளி நாட்டரிக்கு பயணம் செய்ய வைப்பார், கூடவே பிரச்சனைகளையும் உருவாக்குவார். நீங்கள் எதிர் பார்த்த படி வசதியான தங்கிருப்பு கிடைப்பதில் சிக்கல்எழலாம். நீங்கள் உங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியாக இருக்க கூடும். இது உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். புனித யாத்திரை மேற்கொள்ள திட்டமிடலாம். தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாங்கும் விடுதி உங்களுக்கு சௌகரியமாக இருக்காது. நீங்கள் சுப காரியத்திற்காக பயணித்தாலும் செலவுகள் விண்ணை தொடும் அளவிற்கு அதிகரிக்கும். இதனால் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சி குறைந்தே காணப் படுவீர்கள்.
நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவர் என்றால், விசா சம்பந்தமான விசயங்களில் சில பிரச்சனைகள் உருவாகக் கூடும். மேலும் நீங்கள் உங்களது தாய் நாட்டிற்கு திரும்பும் நிலையம் ஏற்படலாம். நிரந்தர குடியுரிமை, கிரீன் கார்டு போன்ற முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தராது. எனினும், சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் தொழில் சம்பந்தமான பயணம் அக்டோபர் 2018ற்கு மேல் பலனளிக்கும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த முயற்ச்சிகள் அக்டோபர் 2018ற்கு மேல் சாதகமாக இருக்கும். வெளி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விசா கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் ஜென்ம ஜாதகமும் உங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதனால் உங்கள் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.




Prev Topic

Next Topic