2018 புத்தாண்டு வேலை / உத்யோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்யோகம்


சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். முக்கியமாக நீண்ட கால பலன்களை நீங்கள் எதிர்ப் பார்க்கலாம். எனினும் ராகு 10ஆம் வீட்டிலும் குரு ஜென்ம ஸ்தானத்திலும் நிலவுவதால் அவர்கள் உங்களுக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்த கூடும்.
நீங்கள் புது வேலைக்காக முயற்சி செய்குறீர்கள் என்றால் அது சனியின் பலத்தால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் அதில் நீங்கள் நல்ல வளர்ச்சியை காண முடியாது. உங்களது உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதில் அதிக தாமதம் ஆகலாம். உங்களது முதலாளி அல்லது மேலாளர் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். நீங்கள் மிக கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களது அலுவலகத்தில் உங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். மேலும் மறைமுக எதிரிகள் அதிகம் தோன்றுவார்கள். அவர்கள் உங்களது பலத்தை குறைக்க கூடும். நீங்கள் 24/7 உழைத்தாலும் உங்களால் உங்களது மேலாளரை செப்டம்பர் 2018 வரை மகிழ்ச்சி அடைய செய்ய முடியாது.


அக்டோபர் 2018ற்கு மேல், உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை காணலாம். அலுவலகத்தில் எந்த அரசியலும் இருக்காது. மேலும் உங்கள் மதிப்பு உயரும். நல்ல சன்மானமும் பதவியும் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.



Prev Topic

Next Topic