2018 புத்தாண்டு தொழில் மற்றும் வேற்று வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

தொழில் மற்றும் வேற்று வருமானம்


குரு, சனி மற்றும் ராகு நல நிலையில் இந்த வருடம் இல்லை. இதனால் நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். எனினும் உங்களது தொழில் தொடர்ந்து ஒரு வளர்ச்சி மிகுந்த பாதையில் செல்ல நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து செயல் படுவது நல்லது. இல்லையென்றால் பாதுகாப்பாக வெளியேறுவது நல்லது அல்லது உங்கள் வாழ்க்கை துணைவர் பெயரை இணைத்து தொழிலை நடத்துவது நல்லது. ஜென்ம ஜாதகத்தை உங்களது ஜோதிடரிடம் காட்டி ஆலோசனை பெற்று அதன் பின் செயல் படுவது பல பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்க உதவும்.
இந்த வருடம் நீங்கள் உங்களது நீண்ட கால வாடிக்கையாளரையும் இழக்க நேரலாம். இதை உங்களது போட்டியாளர்கள் சாதகமாக எடுத்து கொண்டு அவர்கள் லாபம் பெற முயல்வார்கள். மேலும் உங்களது குடும்ப பிரச்சனையால் உங்களது தொழிலில் கவனம் சிதறலாம். அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் அதிக கவனத்தோடு செயல் பட வேண்டிய காலகட்டமாகும். உங்களது நிதி நிலையும் வெகுவாக பாதிக்க கூடும். அது உங்களது மன நிம்மதியை குறைக்கும். வங்கியில் ஏதேனும் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அது ஒப்புதல் பெறுவது சந்தேகமே. முதலீட்டாளர்கள் உங்களது யோசனையை கேட்க மாட்டார்கள். மேலும் உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் அதை திருப்பி கொடுக்குமாறு உங்களை நெருக்கடியில் தள்ளுவார்கள். மேலும் வட்டியையும் உயர்த்துவார்கள்.


சுய தொழில் புரிவோர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள், மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் செப்டம்பர் 2018 வரை கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். எனினும் இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள் நல்ல நிவாரணம் கிடைக்கும்.



Prev Topic

Next Topic