2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரை - நல்ல நேரம் (75 / 100)


குரு பகவான் வரும் அக்டோபர் 11, 2018 அன்று விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் உங்களது ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது பின்னடைவுகள் அனைத்தையும் தீர்ப்பார். உங்களது மோசமான காலகட்டம் முடிவடைந்ததால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. உங்களது உடல் நலப் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவுகள் குறைவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் உங்களது குடும்பத்தினர்களிடம் இருந்து பிரிந்து இருக்கின்றீர்கள் என்றால் அவர்களுடன் சேர இது ஏற்ற காலகட்டம் ஆகும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை அவர்களுடன் பேசி தீர்க்க முயற்சிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு தக்க வரன் கிடைத்து திருமணம் நடக்க இது ஏற்ற காலகட்டமாகும். மேலும் வீட்டில் சுப காரியம் செய்யவும் இது ஏற்ற காலகட்டமாகும். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். மேலும் உங்களுக்கு குழந்தை பிறப்பதற்கும் இது தக்க தருணமாக உள்ளது.
தற்போது உள்ள வேலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் புதிதாக வேலை தேடுகுரீர்கள் என்றாலோ, உங்களுக்கு பல புது வாய்ப்புகள் கிடக்க இது தக்க தருணமாகும். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு புது வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு அலுவலகத்தில் வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதற்க்கான சன்மானமும் அங்கிகாரமும் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். புது முதலீட்டாளர்களாலும், எதிர் பார்த்த வங்கி கடன் கிடப்பதாலும் மற்றும் புது பங்குதாரர்கள் கிடைப்பதாலும் உங்களது பண வரத்து அதிகரிப்பதோடு நிதி நிலையம் மேம்படும். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். பயணம் உங்களுக்கு பலனளிக்கும். மேலும் நீங்கள் வெளி நாட்டில் குடியேற இது ஏற்ற காலகட்டமாகும்.


நீங்கள் இந்த நான்காம் பாக காலகட்டத்தில் உங்களது செலவுகளை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். இதனால் உங்களது நிதி நிலை நல்லபடியாக இருக்கும். உங்களது வங்கி கடன் மற்றும் கிரெடி கார்டுக்கான விண்ணப்பம் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை முதலீடு செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் காண முதலீடு செய்பவர்கள் எதிர் பார்த்த லாபம் பெறலாம். எனினும் பங்கு சந்தையில் லாபம் பெற உங்களது மகா தசை சாதகமாக இருக்க வேண்டும்.



Prev Topic

Next Topic