![]() | 2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
இந்த 2018ஆம் வருடம் உங்கள் உடல் நலத்தில் பெரிதாக பாதிப்புகள் இருக்காது. குரு 8ஆம் வீட்டில் உள்ளதால் உங்கள் உடல் நலம் பாதிக்க படாது. எனினும் நீங்கள் அதிக மன அழுத்தத்தோடும் மன உளைச்சலோடும் இருப்பீர்கள். சனி 12ஆம் வீட்டிற்கு சஞ்சரிக்க உள்ளதால் உங்களது தூக்கம் வெகுவாக குறையும். உங்களது பெற்றோர்களின் உடல் நலமும் பாதிக்க கூடும். அதனால் மிக கவனமாக செயல் படுவது உத்தமம். இந்த வருடத்தின் அனேக நாட்கள் செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் உங்கள் உடல் எத்தகைய பாதிப்புகளையும் எதிர் கொள்ளும் அளவிற்கு நலமோடு இருக்கும்.
உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களது மன உளைச்சல் அதிகரிக்கலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கத்திற்கு ஆளாக நேரிடும். இது உங்களது நிம்மதியை வெகுவாக பாதிக்க கூடும். தினமும் ஹனுமன் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் சொல்வதால் / கேட்பதால் ஓரளவுக்கு பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
Prev Topic
Next Topic