2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

காதல்


இந்த 2018ஆம் வருடம் காதல் சம்பந்தமான விசயங்கள் உங்களுக்கு கசப்பான அனுபவங்களையே தரக் கூடும். காதலை விட சண்டையே அதிகமாக இருக்கும். மேலும் நீங்கள் தற்போது யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால் அதிக உரிமை கொள்வதால் உங்கள் இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் வரக் கூடும். முக்கியமாக புதிதாக நண்பர் அல்லது தோழி யாரேனும் உங்கள் இருவருக்கு மத்தியில் அறிமுகமானார்கள் என்றால் அவர்களால் அதிக பிரச்சனைகள் வரலாம். எனினும் நீங்கள் மிக பொறுமையாக செயல் பட வேண்டும். உங்களது துணையின் எண்ணங்களை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் இருவரும் தற்காலிகமாக பிரிய கூடும்.
நீங்கள் யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால், மிக கவனமாக இருக்க வேண்டும். அவரிடத்தில் உங்களது விருப்பத்தை கூறு இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் அவசர பட்டு கூறினால் அவர் அதை ஒரு பொழுது போக்காக எடுத்து கொண்டு சில நாட்கள் கழித்து உங்களை விட்டு சென்று விடுவார். அது நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தலாம்.


உங்களது மனதில் பல தேவையற்ற சிந்தனைகள் எழலாம். நீங்கள் தவறான பெண்ணையோ / ஆணையோ தேர்ந்தெடுக்க நேரிடலாம். மேலும் நீங்கள் உணர்ச்சிவசப் படாமல் சிந்தித்து செயல் படுவது நல்லது. குழந்தை பெறுவது குறித்த திட்டங்களை நவம்பர் 2018ற்கு மேல் முயற்ச்சிப்பது மற்றும் சுப காரியம் நிகழ்த்துவது நல்லது.


Prev Topic

Next Topic