![]() | 2018 புத்தாண்டு திரை நக்ஷத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | திரை நக்ஷத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், காலை, அரசியல்
இந்த வருடம் உங்களுக்கு கலவையான பலன்களே கிடைக்கும். செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எனினும் அதற்க்கான சன்மானம் குறைவாகவே இருக்கும். உங்கள் புகழையும் உத்தியோகத்தையும் காப்பாற்றி கொள்ள நீங்கள் வரும் வாய்ப்புகளை ஏற்று கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பல மறைமுக எதிரிகள் தோன்றி உங்களது மன நிம்மதியை கேட்ப்பார்கள். யாரிடத்திலும் புதிதாக பழகுவதை தவிப்பது நல்லது. நீங்கள் பிறரிடத்தில் நட்பு ரீதியாக வெளியில் சென்றாலும் அது குறித்து பலர் தவறாக பேசக் கூடும். அது உங்களது செல்வாக்கை குறைக்கும்.
ஜூலை 2018 முதல் செப்டம்பர் 2018 வரை உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிகம் கவலை நிறைந்திருக்கும். இது உங்களை சோர்வடைய செய்யும். இதனால் உங்கள் மனம் பாதிக்க பட்டு நீங்கள் பதற்றத்துடன் காணப் படுவீர்கள். நீங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தயாரிப்பாளர்களும் வினியோகஸ்த்தர்களும் செப்டம்பர் 2018 வரை எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. எனினும் அக்டோபர் 2018ற்கு மேல் குருவின் பலத்தால் உங்களுக்கு பல நல்ல மற்றும் பெரிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic