![]() | 2018 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 09, 2018 முதல் ஜூலை 10, 2018 வரை - குறிப்பிடத்தக்க மீட்பு (60 / 100)
கடந்த 6 மாதங்களாக உங்களுக்கு இருந்த இன்னல்களில் இருந்து நீங்கள் சற்று விடு படுவீர்கள். கேது உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் இது நாள் வரை ஆனுபவித்து வந்த வலி மிகுந்த சூழல்களில் இருந்து தற்போது சிறிது விடு படுவதற்கு உறுதுணையாக இருப்பார்.
உங்கள் மனதில் பலம் கூடும். அதனால் நீங்கள் எந்த ஒரு சவால் மிகுந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராவீர்கள். இது நாள் வரை உங்களது குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் உங்களது குடும்பத்தினர்களோடு அதை பற்றி பேசுவீர்கள். இது உங்களுக்கிடையே நல்ல உறவை வளர்க்க உதவும். நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் உங்கள் மனதில் பல சிந்தனைகள் எழலாம், அதனால் நன்கு சிந்தித்து செயல் படுவது நல்லது. மேலும் எந்த விசயங்களையும் உங்களது நண்பர்கள் அல்லது ஆலோசகர் துணையோடு கவனாமாக கையாள வேண்டும்.
உங்களுக்கு ஏற்ற துணியை நீங்கள் கண்டிருந்தாலும் வரும் அக்டோபர் 2018 வரை திருமனத்திர்க்கான முயற்சி அல்லது உங்களது விருப்பத்தை கூறுவதை தள்ளிப் போடுவது நல்லது. மேலும் குரு பெயர்ச்சியின் இந்த மூன்றாம் பாக காலகட்டத்தில் உங்களுக்கு நிச்சயதார்த்தம் செய்ய விரும்பினால் அது பிற்பாடு சில பிரச்சனைகளில் கொண்டு விடும், முக்கியமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2018 எந்த ஒரு திருமணத்திற்கான முயற்ச்சியையும் எடுக்க வேண்டாம். திருமணம் ஆனவர்களுக்கிடையே சில மனஸ்தாபங்கள் எழக் கூடும். மேலும் குழந்தை பேருக்கான முயற்சி எதுவும் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றால் அது உங்களுக்கு சாதகமான திசையில் செல்லக் கூடும்.
நீங்கள் புதிதாக வேலை தேடுகுரீர்கள் என்றால், உங்களுக்கு அது குறித்து சியல் வாய்ப்புகள் வரும். நீங்கள் விரும்பிய படி வேலை கிடைக்கவில்லை என்றாலும் வருவதை ஏற்று கொள்ளுங்கள். அதுவே இந்த சூழலுக்கு சரியான முடிவாகும். மேலும் அலுவலகத்தில் உங்களது வேலை சுமை அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்க பட்ட வேலையை தக்க சமயத்தில் முடிக்க முடியாமல் தினருவீர்கள். எனினும் நீங்கள் அனைத்தையும் சமாளிப்ப்பீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களது குடும்பத்தினர்களோடு அதிக நேரம் செலவிடுவீர்கள். இது சிப் சொந்த பிரச்சனைகளை சமாளிக்க உதவும். தொழிலதிபர்கள் ஒரு நல்ல முன்னேற்றமான சூழலை காண்பீர்கள். உங்களுக்கு சில சிறிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்க தொடங்கும். இதனால் உங்களது பண வரத்தும் அதிகரிக்க கூடும். நீங்கள் உங்களது தொழிலை தொடர்ந்து சீரான வகையில் நடத்தி செல்வீர்கள். மேலும் இந்த காலகட்டம் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள சாதகமாக உள்ளது. அதனால் உங்களது விசா மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆவணங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.
நிதி அல்லாது பண வரவு குறித்தவரை உங்களது கிரக நிலைகள் சாதகமாக உள்ளது. நீங்கள் மறு நிதியாக்கம் செய்வதால் ஓரளவிற்கு கடன் தொல்லையில் இருந்து மீண்டு வருவீர்கள். மேலும் அது வட்டி விகிதத்தையும் குறைக்க உதவும். உங்களது நண்பர்கள் உங்களுக்கு நிதி உதவி செய்து கடன்களை அடைக்க அல்லது குறைக்க உதவுவார்கள். வர்த்தகர்கள் உங்களது தவறுகளை உணருவீர்கள். எனினும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு உங்களிடம் போதுமான அளவு பணம் இருக்காது. இருப்பினும் நீங்கள் முதலீடு செய்ய முயன்றால் அதனை தற்போது தள்ளிப் போடுவது நல்லது. இது மேலும் நட்டத்தை தவிர்க்க உதவும். நீங்கள் ரியல் ஈஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பினால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செய்வது நல்லது. மேலும் உங்களது ஜோதிடருடைய ஆலோசனையையும் பெற்று கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic