![]() | 2018 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 10, 2018 முதல் Oct 11, 2018 வரை - கெட்ட நேரம் (25 / 100)
இது மிகவும் மோசமான காலகட்டமாகும். அணைத்து விசயங்கலும் உங்களது கட்டுப்பாட்டை மீறி செல்லும். நீங்கள் பிரச்சனைகளை சமாளிக்க அதிகமாக தினருவீர்கள். மேலும் உங்களது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் உங்களை வெகுவாக பாதிக்கும். நீங்கள் அதிக நாட்கள் தூக்கம் இல்லாத இரவுகளையே கழிப்பீர்கள். உங்கள் மனதில் அதிக வருத்தம் ஏற்படும் அதனால் நீங்கள் மன அழுத்தத்துடன் காணப் படுவீர்கள். சுதர்சன மகா மந்திரத்தை தினமும் கேட்பதால் ஓரளவிர்க்காயினும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். மேலும் உங்களது மன பலத்தை அதிகரித்து கொள்ள நீங்கள் தினமும் த்யானம் மற்றும் இறை வழிபாடு செய்வது முக்கியம்.
திருமணம் ஆன தம்பதியினர்களுக்கிடையே வாக்குவாதமும் கருத்து வேறுபாடும் ஏற்படும். காதலர்கள் மிக கடினமான காலகட்டத்தை கடக்க வேண்டியதிருக்கும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் தற்காலிகமாக உங்கள் மனைவி / கணவனையோ அல்லது நீங்கள் விரும்புவரையோ பிரியக் கூடும். உங்களது குழந்தைகள் உங்களது வார்த்தைகளை கேட்க மாட்டார்கள். மேலும் வீட்டில் சுப காரியம் செய்வதை தற்போது தள்ளிப் போடுவது நல்லது. நீங்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் உறவினர்களுக்கு மத்தியில் அவமானப் படக் கூடும். மேலும் தவறான நட்புகள் உங்களது பேரை மேலும் கெடுக்க கூடும். நீங்கள் வழக்குகளிலும் சிக்க நேரலாம். அதனால் தற்போது ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால் அதனை குருவின் பலம் கிடைப்பதற்காக வரும் அக்டோபர் 2018 வரை தள்ளிப் போடுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கும். உங்களை வேலையை விட்டு எடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. மேலும் நீங்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உதிய உயர்வு கிடைக்காததால் நீங்கள் ஏமாற்றம் ஏமாற்றம் அடையக் கூடும். மேலும் மறைமுக எதிரிகளால் நீங்கள் அதிகம் பாதிக்க படுவீர்கள்.
தொழிலதிபர்கள் பெரிய அளவில் நட்டத்தை எதிர் கொள்ள நேரலாம். ஜென்ம ஜாதகம் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் நிலையும் ஏற்படலாம். நிதி நிலை பொறுத்த வரையில் இது உங்களுக்கு ஒரு சவால் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். நீங்கள் உங்களது பணத் தேவைகளுக்கு உங்களது கிரெடிட் கார்டை நம்ப வேண்டியதிருக்கும். மேலும் நீங்கள் உங்களது தின தேவைகளுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். அதனால் செலவுகளை கவனித்து தேவையற்ற செலவுகளை குறைப்பது ஓரளவிர்க்கயினும் சூழ்நிலையை சமாளிக்க உதவும். இந்த காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீட்டை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. எனினும் குரு உங்களது ராசியின் பாக்ய ஸ்தானத்திற்கு வரும் அக்ட்பேர் 11 2018 அன்று பெயருவதால் உங்களுக்கு குறிப்பிடத்தக்க பலன்களை தர உள்ளார்.
Prev Topic
Next Topic