![]() | 2018 புத்தாண்டு வேலை மற்றும் உத்யோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வேலை மற்றும் உத்யோகம் |
வேலை மற்றும் உத்யோகம்
இந்த 2018ஆம் வருடம் குரு 8ஆம் வீட்டிலும் சனி 10ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் அலுவலகத்தில் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரிடும்.
சொந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் உங்களது வேலையில் ஆர்வத்தை இழப்பீர்கள். மேலும் வேலையின் அழுத்தம் அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நேரத்திற்கு முடிக்க முடியாமல் தவிப்பீர்கள். நீங்கள் உண்மையான மற்றும் தக்க காரணம் கூறினாலும் உங்களது மேலாளர் அதை ஏற்று கொள்ள மாட்டார். இது அலுவலகத்தில் உங்களது செல்வாக்கையம் மற்றும் பேரையும் பாதிக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது இந்த சூழ்நிலையை அவர்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு அவர்கள் வளர நினைப்பார்கள். மேலும் உங்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிரிகள் அதிகம் தோன்றுவார்கள். கடந்த ஒரு வருடமாக நீங்கள் பெற்று வந்த வளர்ச்சியை கண்டு அலுவலகத்தில் இருப்பவர்கள் பொறாமை படுவார்கள். இதனால் அவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். முக்கியமாக நீங்கள் பெண்களை தூரத்தில் வைப்பது நல்லது.
அலுவலகமாகட்டும் அல்லது குடும்பமாகட்டும் பெண்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. அது உங்களது பிரச்னைகளை குறைக்கும். நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்களது மேலாளர் அல்லது உயர் அதிகாரிகள் உங்களுக்கு பிரச்சனை தரக் கூடும். ஆணோ பெண்ணோ, புதிதாக நட்பு வளர்த்து கொள்வதை தவிர்க்கவும். அது உங்களது செல்வாக்கை குறைக்கலாம். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் அலுவலகத்தில் அவமானப் படவும் நேரலாம். உங்களை அலுவலகத்தில் இருப்பவர்கள் அதிக சித்திரவதைக்கு உள்ளாக்கலாம். எனினும் நீங்கள் அதிக பொறுமையோடு இருப்பது நல்லது.
இந்த வருடத்தின் கடைசி 3 மாதங்கள் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் முன்னேற்றம் ஏற்படும். மேலும் செவ்வாய் மற்றும் கேது 11ஆம் வெட்டில் மார்ச் 2018ற்கு மேல் நான்கு மாதங்கள் சஞ்சரிப்பதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic