2018 புத்தாண்டு தொழில் மற்றும் வேற்று வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

தொழில் மற்றும் வேற்று வருமானம்


தொழிலதிபர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு சனி, குரு மற்றும் ராகுவின் சாதகமற்ற நிலைப்பாட்டால் பல பின்னடைவுகளை, குறிப்பாக நிதி நிலையில் கண்டிருப்பீர்கள். ஆனால் தற்போது குரு மற்றும் ராகுவின் நிலைபாடு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு பல நன்மைகள் நிகழ உள்ளது. இந்த 2018ஆம் வருடம் உங்கள் தொழிளில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். நீங்கள் உங்களது போட்டியாளர்களை எதிர்த்து முன்னேறி வருவீர்கள்.
மேலும் உங்களுக்கு புது மற்றும் பெரிய வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல ப்ரொஜெக்ட்டுகள் கிடைக்கும். இது உங்களது பண வரத்தை அதிகரிக்கும். இதனால் நீங்கள் உங்களது நிதி ப்ரிச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் மேலும் நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்து உங்களது தொழிலை விரிவு படுத்துவார்கள். எனினும் உங்களுக்கு தற்போது ஜென்ம சனி நடைபெறுவதால் நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது நன்மையை தரும். ஏனென்றால் சனி உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் ப்ரொஜெக்ட்டுகளை சரியான நேரத்தில் செய்யவதற்கு அதிக அழுத்தத்துடன் வேலை பார்க்க வேண்டியதிருக்கும்.


நீங்கள் வங்கி கடனுக்கு முயற்சிக்குறீர்கள் என்றால் அது உங்களுக்கு எளிதாக ஒப்புதல் பெரும். உங்களுக்கு தேவையான நிதி உதவி கிடைக்கும். மேலும் புது முதலீட்டாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எனினும் ஜென்ம சனி இருப்பதால் நீங்கள் உங்களது மனைவி / கணவன் பெயரை சேர்த்து தொழில் செய்யவது நல்ல வளர்ச்சியை கொடுக்கும். நவம்பர் 2018 மேல் நீங்கள் அதிக வளர்ச்சியையும் வெற்றியையும் காணலாம்.
சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு இந்த பெயர்ச்சி காலம் நன்றாக உள்ளது. உங்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். மேலும் தக்க சன்மானமும் கிடைக்கும். உங்களது பேரும் புகழும் உயரும். குருவின் பலத்தால் நீங்கள் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.




Prev Topic

Next Topic