![]() | 2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
கடந்த 2017ஆம் ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு சவாலாகவே இருந்திருக்கும். உங்கள் மனைவி / கணவனுடன் மற்றும் குழந்தைகளிடம் பல சண்டை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்க கூடும். மேலும் உங்களது கணவன்/ மனைவி வீட்டாரிடம் சில மன குழப்பத்தில் இருந்துருப்பீர்கள்.
குரு 5 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் செப்டம்பர் 2018 வரை உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவழித்து மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்க்க முயல்வீர்கள். உங்களது குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவார்கள். உங்களது குழந்தைகள் உங்களது பேச்சை கேட்பார்கள். மேலும் அவர்களது படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
உங்களது குடும்பத்தில் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்களுடன் ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளீர்கள் என்றால் அது தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் நீங்கள் உங்களது உறவினர்களிடம் இருந்து பிரிந்து இருக்கிறீர்கள் என்றால் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழ்வீர்கள். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பதற்றம் அதிகரித்தாலும், சுப காரியம் செய்வதற்கு இது நல்ல காலகட்டமாகும். நீங்கள் சமுதாயத்தில் பெரும் நன்மதிப்பும் பெறுவீர்கள். உங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு சந்தோசமாக செலவிடுவார்கள்.
Prev Topic
Next Topic