![]() | 2018 புத்தாண்டு பணம் / நிதி ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | பணம் / நிதி |
பணம் / நிதி
கடந்த ஒரு வருடமாக உங்களது சேமிப்பு மிகவும் பாதிக்க பட்டிருக்கும். உங்களது சேமிப்பு பெரும் அளவு குறைந்திருக்கும். மேலும் உங்களுக்கு கடன் சேர்ந்திருந்தாலும் அதில் ஆச்சரியப் பருவத்திற்கு ஒன்றும் இல்லை. எனினும் குரு பகவான் உங்களது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது கடன்களை நீங்கள் விரைந்து அடைப்பீர்கள். கடன் வெகுவாக குறையும். உங்களது பணம் மற்றும் வருமானம் பல வழிகளில் வரும். சிலருக்கு வெளி நாடுகளில் இருந்தும் பண உதவி வரலாம். உங்களது நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு துணையாக இருந்து உங்களது பண பிரச்சனைகளில் இருந்து வெளி வர உதவுவார்கள். உத்யோகத்தில் உங்களது வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களது செலவுகள் குறையும். இதனால் உங்களுக்கு கடனை அடைக்க போதுமான பணம் கிடைக்கும். உங்களது சேமிப்பும் அதிகரிக்கும். நீங்கள் வங்கி கடனுக்கு விண்ணப்பித்துளீர்கள் என்றால் அது எந்த தடையும் இன்றி ஒப்புதல் பெரும்.
எனினும் நீங்கள் வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் ஏதேனும் காப்பீடு தேவை பட்டாள் அவற்றை சரியாக எடுத்து கொள்வது செலவுகளில் இருந்து உங்களை காக்கும். நீங்கள் வீடு அல்லது மனை வாங்க இது ஏற்ற காலகட்டமாகும். எனினும் நீங்கள் சந்தை விலையை விட சற்று அதிகமாக கொடுக்க கூடும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவதற்கு இது உகந்த காலம் இல்லை என்றாலும், நீங்கள் வசிக்க வீடு வாங்க ஏற்ற காலமாகும். எனினும் உங்களது புது வீட்டில் நீங்கள் குறைந்தது 4 முதல் 6 ஆண்டு காலம் வசிப்பது உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
Prev Topic
Next Topic