![]() | 2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரை - உடல் நலம், உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகள் (45 / 100)
அக்டோபர் 11, 2018 அன்று குரு பெயர்ச்சி நடக்க விருக்கிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களது உடல் நலத்திலும் உங்கள் ககுடும்பத்தினர்களின் உடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் என்னவென்று தெரியாத நோயால் அவதிப் படக் கூடும். மேலும் குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் மற்றும் சனி 1ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது குடும்பத்தில் அமைத்து மற்றும் ஒற்றுமை பாதிக்க கூடும். நீங்கள் கசப்பான அனுபவங்களை உங்களது வாழ்க்கையில் காண்பீர்கள். மேலும் திருமணத்திற்கு முயர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது. திருமணம் ஆன தம்பதியினர்கள் குழந்தை பேருக்கான முயற்ச்சியை தள்ளிப் போடலாம். நீங்கள் ஏற்கனவே சுப காரியம் செய்ய முயர்ச்சித்திருந்தால் அது தள்ளிப் போக வாய்ப்புள்ளது. நீங்கள் யாரையாவது விரும்புகுரீர்கள் என்றால் அவருடன் தேவையற்ற சண்டை வரலாம்.
இந்த காலகட்டத்தில் உங்களது வேலை சுமை அதிகரிக்கக் கூடும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் உங்களது உற்பத்தி திறன் பாதிக்க படலாம். அதனால் உங்களது உத்தியோகத்தை காப்பாற்றி கொள்ள நீங்கள் உடன் வேலை பார்ப்பவர்களுடன் தேவை இல்லாமல் வாக்குவாதமோ அல்லது சண்டையோ போடாமல் இருப்பது நல்லது. வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்கள் விசா குறித்த பிரச்சனைகளால் தாய் நாடு திரும்பும் நிலை ஏற்படலாம்.
தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். மேலும் உங்களது நிதி நிலை பெரிதும் பாதிக்க படலாம். இந்த காலகட்டத்தில் புது முயற்சியோ அல்லது முதலீடோ செய்யாமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic