2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


2017ஆம் ஆண்டு மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கத்தின் காரணமாக உங்களது உடல் நலம் பாதிக்க பட்டிருந்திருக்கும். இந்த 2018ஆம் வருடம் சனி பகவான் பல உடல் உபாதைகளை ஏற்படுத்துவார். எனினும், குரு பகவானின் பலத்தால் உங்களுக்கு தக்க மருத்துவம் கிடைத்து விரைவாக குணமடைவீர்கள்.
குருவின் பலத்தால் அனைத்தும் நலமோடும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம். மேலும் ராகு உங்களது 8ஆம் வீட்டில் இருப்பதால் அவர் உங்களது பிரச்சனைகளின் வீரியத்தை குறைப்பார்.


எனினும் நீங்கள் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதை ஜூலை 1௦, 2018ற்கு மேல் செய்வது நல்லது. இல்லை என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செய்வது நல்லது. மேலும் நீங்கள் ஏற்க்கனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டுளீர்கள் என்றால் குருவின் அருளால் விரைவாக குணமடைவீர்கள். எனினும் கடவுள் பிராத்தனை மற்றும் த்யானம் செய்வது உங்களுக்கு மன நிம்மதியை தருவதோடு விரைவாக குணமடையவும் உதவும். ஹனுமன் சாலிசா மற்றும் லலிதா சஹஸ்ர நாமம் கேட்பது நல்ல பலனை தரும்.



Prev Topic

Next Topic