2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

காதல்


கடந்த 2017ஆம் ஆண்டு உங்கள் காதல் விவகாரங்களில் கசப்பான அனுபவங்களை கண்டிருப்பீர்கள். மேலும் நீங்கள் விரும்புபவரிடம் அதிகம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். தற்போது குருபகவான் ௫ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த 2018ஆம் வருடம் காதல் விசயங்களில் வெற்றி நிறைந்ததாகவே இருக்கும்.
நீங்கள் விரும்புபவருடன் உங்களது கடந்த கால கசப்பான அனுபவங்களை பகிர்ந்து மனம் விட்டு பேசி தீர்வு காண்பீர்கள். மேலும் உங்களது விருப்பத்தை கூறுவதில் வெற்றி பெறுவீர்கள்.


திருமணம் ஆனவர்கள், ஒற்றுமையோடும் அன்போடும் , அந்நுயூனியத்தோடும் வாழ்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினருக்கு இப்பொழுது நல்ல சூழல் வரும். நீங்கள் பெண்ணாக இருந்தால் ஜென்ம சனி நடப்பதால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து குழந்தை பேரு பெறுவதை பற்றி நல்ல காலகட்டத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் IVF மற்றும் IUI திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கவும் திருமணம் ஆகவும் அடுத்த ஒரு வருடம் ஏற்ற காலமாகும். மேலும் உங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உங்களது காதல் விருப்பத்தை ஏற்று ஒப்புதல் தருவார்கள்.


Prev Topic

Next Topic