![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு மற்றும் சனி பகவானின் சாதகமற்ற நிலைப்பாட்டால் 2017ஆம் ஆண்டு உங்களுக்கு உத்தியோகத்திலும் நிதி நிலையிலும் பல பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்க கூடும்.எனினும் இந்த 2018ஆம் வருடம் குரு உங்கள் ராசியின் 11ஆம் மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறப்பாக இருக்கும். மேலும் ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். இருப்பினும் ஜென்ம சனி நிலவுவது சற்று பலவீனத்தை ஏற்படுத்த கூடும்.
ஏழரை சனியின் தாக்கம் நான்கு மாதங்கள், அதாவது 2018 மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும். மற்ற எட்டு மாதங்கள் பிற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனால் நேர்மறை சக்த்தியின் பலன் எதிர் மறை சக்த்தியை விட அதிகமாக காணப் படும். இதனால் உங்கள் கடின உழைப்பிற்கான சன்மானம் கட்டாயம் இந்த வருடம் உங்களுக்கு கிடைக்கும், செப்டம்பர் 2018 வரை நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காபீர்கள்.
Prev Topic
Next Topic