2018 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

ஜூலை 10, 2018 முதல் Oct 11, 2018 வரை - ஆச்சரியத்தக்க முனேற்றம் (75 / 100)


குரு உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு நல்ல பலத்தை தந்திருப்பார். தற்போது அவர் உங்களுக்கு பல நன்மைகளை தரவிருக்கின்றார். மார்ச் 2018 முதல் நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த கசப்பான சூழலில் இருந்து வெளி வருவீர்கள். உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்களது மனைவி / கணவனிடத்தில் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். இதனால் நீங்கள் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மேலும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான பாக்கியமும் இந்த காலகட்டத்தில் உள்ளது.
வீட்டில் திருமணம், புது மனை புகு விழ போன்ற சுப காரியங்கள் செய்வதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் திருமணம் ஆகாதாராக இருந்தால் அதற்க்கான நேரம் தற்போது வந்து விட்டது. உங்களுக்கு நல்ல வரன் கிடைத்து விரைவில் திருமணமும் எதிர் பார்த்த படி முடியும். நீங்கள் உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு நல்ல நேரம் செலவிடுவீர்கள். மேலும் உல்லாச பயணம் செல்வது மற்றும் விழாக்களில் பங்கு பெறுவது என மகிழ்ச்சியாக இந்த காலகட்டம் இருக்கும். உங்களது குழந்தைகள் உங்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை மகில்விப்பதோடு பெருமிதமும் கொள்ள வைக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குரு நல்ல முனேற்றத்தையும் வெற்றியையும் தருவார். நீண்ட காலமாக அலுவலகத்தில் நிலவி வந்த சாதகமற்ற மற்றும் பிரச்சனையை மிகுந்த சூழல் தற்போது மாறும். நீங்கள உங்களது பதவி உயர்வை பற்றி உங்களது உயர் அதிகாரியிடம் பேசுவதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். மேலும் சம்பள உயர்வையும் நீங்கள் எதிர் பார்க்கலாம். நீங்கள் புதிதாக வேலைக்கு முயர்ச்சிக்கின்றீர்கள் என்றால் அது எதிர் பார்த்தது போல் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் இது நாள் வரை இருந்த பின்னடைவுகளில் இருந்து தற்போது மீண்டு வருவீர்கள். நீங்கள் உங்களது தொழிலில் வளர்ச்சியை காண்பீர்கள். உங்களுக்கு பல புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். அதனால் பண வரவு அதிகரிக்கும். உங்களது நிதி தேவைகளை நீங்கள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள். எனினும் உங்களது மகா தசை சாதகமாக இல்லை என்றால் அதிக அளவில் லாபத்தை எதிர் பார்க்க முடியாது. எனினும் வரும் அக்டோபர் 2018 மேல் முடிந்த அளவிற்கு தொழிலில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.


குரு பெயர்ச்சியின் இந்த நான்காம் பாக காலகட்டத்தில் உங்களது வருமானம் மற்றும் நிதி நிலை நல்ல படியாக உள்ளது. நீங்கள் உங்களது கடன்களை விரைவாக அடைப்பீர்கள். மேலும் பண வரத்தும் அதிகரிக்கும். புது வீடு வாங்குவதற்கு உங்களுக்கு வங்கியில் கடன் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு சாதகமாக இருக்கும். எனினும் ஊக வர்த்தகம் மற்றும் நாள் வர்த்தகம் செய்ய விரும்பினால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி முயற்ச்சிப்பது நல்லது. எனினும் எந்த விதமான பங்கு சந்தை முதலீடு மற்றும் அது சம்பந்தமான செயல்களையும் வரும் அக்டோபர் 2018குள் முடித்து வெளி வருவது உத்தமம்.

Prev Topic

Next Topic