![]() | 2018 புத்தாண்டு பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
நீங்கள் வெளி நாட்டிற்கு செல்ல இந்த குரு பெயர்ச்சி காலம் ஏற்றதாகும். உங்களது குடும்பத்தினரோடு சுற்றுலா பயணம் செல்வது உங்களுக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். மேலும் தொழில் சம்பந்தமான பயணங்கள் உங்களுக்கு வெற்றியை தரும்.உங்களது பயணத்தில் உங்களுக்கு பலர் உதவுவார்கள். எனினும் ஜென்ம சனி நிலவுவதால் உங்களுக்கு தேவை இல்லாத மன உளைச்சல் மற்றும் பயம் ஏற்படலாம். யோகாசனம் மற்றும் த்யானம் செய்வதால் சற்று நிம்மதியாகவும் மன அமைதியோடும் இருப்பீர்கள்.
விசா கிடைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்திருந்தால் அது தற்போது சரியாகி விடும். உங்களுக்கு விசா கிடைத்து திரும்பவும் வெளி நாட்டிற்கு செல்வீர்கள். மேலும் குடியேற்றம் குறித்து கிறீன் கார்டு, EAD, அல்லது PR உங்களுக்கு தாமதம் இன்று ஒப்புதல் பெரும். குருவின் பலத்தால் நீங்கள் எதிர் பார்த்த படியே அனைத்தும் உங்களது குடியேற்றம் குறித்து நடக்கும். எனினும் நீங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது கனடா போன்ற நாடுகளுக்கு குடியேற்றத்திற்கு முயற்சிக்குறீர்கள் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது நல்லது. இது உங்களுக்கு நேர விரயத்தையும் பண விரயத்தையும் தவிர்க்க உதவும்.
Prev Topic
Next Topic