2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குரு 12ஆம் வீட்டிலும் சனி 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு அதிகம் செலவு செய்வீர்கள். உங்களது மனைவி/ கணவன் மற்றும் குழந்தைகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களது குடும்பத்தில் நிகழும் சில பிரச்சனைகளை இந்த வருடம் மிக சாதூர்யமாக கையாள வேண்டும். உங்களது மகன் அல்லது மகளுக்கு ஏற்ற வரன் பார்க்க இது உகந்த காலகட்டமாகும். திருமணம், புது மனை புகுவிழா போன்ற சுப காரியங்களை நீங்கள் வெற்றியோடு முடிப்பீர்கள். எனினும் நீங்கள் அதிக முயற்சி எடுப்பதோடு செலவும் செய்ய வேண்டியதிருக்கும்குறிப்பாக செப்டம்பர் 30, 2018ற்குள் சுப காரியம் செய்வது உத்தமம்.
நீங்கள் விவாகரத்து மற்றும் குழந்தை காவல் போன்ற வழக்குகளில் ஏதேனும் இருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு அதிக சங்கடத்தையும் பண நட்டத்தையும் ஏற்படுத்தும்.



Prev Topic

Next Topic