![]() | 2018 புத்தாண்டு பணம்/ நிதி ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | பணம்/ நிதி |
பணம்/ நிதி
சனி 2ஆம் வீட்டிலும் குரு 12ஆம் வீட்டிலும், ராகு 9ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்கள் நிதி நிலைக்கு சாதகமற்ற சூழலை காட்டுகின்றது. நிதி நிலையில் பாதகமான விளைவை ஏற்ப்டுத்த கூடும். உங்களது வருமானம் நிலையாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். சில தருணங்களில் அதை நீங்கள் சமாளிக்க திணறுவீர்கள். மேலும் உங்களது குடும்பத்தில் சேரும் புது உறுப்பினர்கள் (மனைவி / கணவன் அல்லது குழந்தை பிறப்பது) உங்களது பண தேவையை அதிகரிக்க கூடும். அதுமட்டும் அல்லாது உங்களது குழந்தையின் கல்வி படிப்பிற்காக அதிகம் செலவு செய்யவும் நேரலாம்.
உங்களது கிரெடிட் கார்டு அதன் அதிக அளவு எல்லையை தொடலாம். மேலும் உங்களது கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதால் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுப்பதில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் வாங்கும் கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டியதும் வரலாம். நீங்கள் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கக் கூடும். உங்களது கௌரவம் காரணமாக சக்தியை மீறி அதிக விலை பொருட்களை வாங்க நிர்பந்திக்க படுவீர். இது உங்களது செலவுகளை மேலும் அதிகமாக்கும். அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றை இந்த காலகட்டத்தில் முயற்சிக்க வேண்டாம். முக்கியமாக முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்கவும். மேலும் கடன் வாங்க உங்களது நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். இந்த குரு பெயர்ச்சி காலம் முடியும் வரை நீங்கள் அதிக பொறுமையுடன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic