![]() | 2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வழக்கு |
வழக்கு
இந்த வருடம் வழக்குகளில் வெற்றியை எதிர் பார்ப்பது சந்தேகமே. பல விசயங்களும் சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக திரும்ப கூடும். மேலும் வழக்குகளால் நீங்கள் பண நட்டத்தையும் மேற்கொள்ள நேரலாம். உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்க்காமல் உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதை தவிர்க்கவும். சனி 2ஆம் வீட்டிலும் ராகு 9ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் வழக்குகளில் இருந்து விடுபடுவது சற்று கடினமே.
இந்த வருடம் முழுவதுமாக உங்களது குடும்பத்தினரோடு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. விவாகரத்து, குழந்தை காவல், சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களை மனதளவில் அதிகம் பாதிக்க கூடும். தினமும் சுதர்சன மகா மந்திரம் மற்றும் கந்தர் சஷ்டி கவசம் கேட்பது உங்களை பிரச்சனைகளில் இருந்து ஓரளவுக்காவது விடுவிக்க உதவும்.
மேலும் தகுந்த வாகன காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. மருத்துவ காப்பீடு மற்றும் வீடு காப்பீடு எடுத்து கொள்வது எதிர் பாராத செலவுகளில் இருந்து உங்களை விடுவிக்க கூடும். நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் அம்பரெல்லா காப்பீடு எடுத்து கொள்வது உங்களது சொத்துக்களை சட்ட ரீதியான பிரச்சனைகளில் இருந்து காக்க உதவும்.
Prev Topic
Next Topic