![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு இந்த வருடம் 2018ல் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயர்ந்து விரய ஸ்தானத்தில் இருக்க உள்ளார். சனி பகவான் 2ஆம் வீட்டில் இந்த வருடம் முழுவதுமாக சஞ்சரிப்பார். இது உங்களுக்கு பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது, தங்க நகைகள் வாங்குவது போன்ற தேவையற்ற அல்லது அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடும்.
கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த வருடம் பல நல்ல பலன்களை தருவார். எனினும் ராகு 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், தேவை அற்ற சில பிரச்சனைகள் வரலாம். சாதாரண பிரச்சனைகளை சமாளிப்பது அல்லது தீர்வு காண்பதுக் கூட உங்களுக்கு கடினமான ஒன்றாகும்.
உங்களது குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். ஏனினினும் அதனால் வரவிருக்கும் செலவுகள் நீங்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் உங்கள் நிதி நிலையிலும் செலவுகளிலும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த வருடம் உங்கள் வாழ்க்கையிலும் / உத்யோகத்திலும் முன்னேற்றம் சற்று நிதானமாகவே வரும்.
Prev Topic
Next Topic