![]() | 2018 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 09, 2018 முதல் ஜூலை 10, 2018 வரை - கலவையான பலன்கள் (50 / 100)
குரு உங்களது ராசியின் 12ஆம் வீட்டில் இருந்த பின்வாங்குவதால் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் குடும்பத்தில் நிலவும் சில பிரச்சனைகளால் தூக்கமின்றி அவதிப் படுவீர்கள். மேலும் உங்களது பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் தினருவீர்கள். மேலும் உங்களது மனைவி / கணவனிடத்தில் தேவையற்ற வாக்குவாதம் எழலாம். அது உங்களை மேலும் வறுத்த பட வைக்கும். எனினும் தற்காலிக பிரிவோ அல்லது பெரிய அளவிலான பிரச்சனைகளோ இருக்காது.
நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு கலவையான பலன்களே இருக்கும். நீங்கள் அதிக நேரம் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க செலவிடுவீர்கள். இதனால் நல்ல சூழல் உங்களது வீட்டில் வரும். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நீண்ட காலம் குழந்தை இல்லாமல் கவலை பட்ட திருமணம் ஆனவர்களுக்கு தற்போது அதற்க்கான பாக்கியம் கிடைக்கும். உங்களது மகன் அல்லது மகளுக்கு திருமனதிர்க்கான ஏற்பாடுகளை செய்ய இது ஏற்ற காலமாகும். நீங்கள் பயணங்கள் நிறைய செய்ய வேண்டியதிருந்தாலும் செலவுகளும் கூடவே அதிகரிக்கும்.
உங்களது சொந்த விசயங்களுக்காக அதிக நேரம் செலவிடுவதால் அலுவலக பணிகள் பாதிக்க கூடும் . இதனால் உற்பத்தி பாதிக்க பட்டு உங்களது மேலாளர் உங்கள் மீது கோபம் கொள்ளக் கூடும். அதனால் பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ நீங்கள் எதிர் பார்ப்பது கடினமே.
தொழிலதிபர்களுக்கு இது ஒரு கடினமான காலமாகும். நீங்கள் உங்களது ப்ரோஜெக்ட்டுகளை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் தவிப்பீர்கள். மேலும் நல்ல வேலை ஆட்களை நீங்கள் இழக்கவும் நேரலாம். ஒரு சில மாதங்களுக்கு பண வரத்து குறைவாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கும். அதனால் நீங்கள் கடன் வாங்கும் சூழலம் ஏற்படலாம்.
நிதி பொறுத்த வரையிலும் உங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். தேவை அற்ற ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது செலவுகளை குறைக்க உதவும். மேலும் உங்களது வீட்டிற்கு அதிக அளவில் நண்பர்களும் உறவினர்களும் வருவதால் செலவுகள் அதிகமாகலாம். நீண்ட கால முதலீடு பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால் அதனை தள்ளி போடுவது நல்லது. அது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம். அதனால் புதிதாக எந்த ஒரு முதலீடும் பங்கு சந்தையில் செய்யாமல் இருப்பது நல்லது. எனினும் நீங்கள் ரியல் எஸ்ட்டேட்டில் முதலீடு செய்யலாம், இருந்தாலும் அதிக தொகை கொடுக்க வேண்டியதிருக்கும்.
Prev Topic
Next Topic