![]() | 2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
தற்போது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பெரிதாக சொல்லும் அளவிற்கு பலன்கள் இல்லை. நீங்கள் வர்த்தகம் / பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் சில நட்டங்களை எதிர் கொள்ள நேரலாம். ராகு உங்களது 9ஆம் வீட்டிலும் மந்த சனியம் உங்களது அதிர்ஷ்டத்தை தடுக்கலாம். நீங்கள் நீண்ட காலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும் தற்போது நீங்கள் செய்யும் எந்த ஒரு முதலீடும் லாபகரமாக இருக்காது. உங்களது சேமிப்பு பெரிதாக பாதிக்க கூடும். ஊக வர்த்தகம் செய்தால் உங்களது நட்டம் அதிகரிக்கலாம். நீங்கள் தவறாக பங்கு சந்தை நிலவரத்தை யூகித்தால் மொத்த பணத்தையும் இழக்க நேரலாம். செப்டம்பர் 2018 முதல் டிசம்பர் 2018 வரை பெரிய அளவில் நட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பணத்தை இழந்தால் அதனை மீட்க்க பல வருடங்கள் ஆகலாம்.
உங்களது குடும்பத்தினருடைய வற்புதலால் நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க முயலலாம். இது குறிப்பாக மார்ச் 2018 முதல் அக்டோபர் 2018 வரை நடக்க கூடும். எனினும் உங்களது அல்லது உங்கள் மனைவி/கணவனுடைய ஜென்ம ஜாதகம் சாதகமாக இருந்தால் நீங்கள் வீடு வாங்கலாம். எனினும் நீங்கள் புது வீட்டில் குறைந்தது நான்கு முதல் ஐந்து வருடம் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic