![]() | 2018 புத்தாண்டு பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
நீங்கள் அதிகம் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இது உங்களது செலவுகளை அதிகரிக்க கூடும். மேலும் உங்களது சேமிப்பையும் கரைக்கும். எனினும் குடும்ப தேவைக்காகவும், வேலை அல்லது தொழில் சம்பந்தமாகவும் நீங்கள் அடிக்கடி பயணம் செய்யக் கூடும்.
உங்களது நண்பர்களும் உறவினர்களும் உங்களை வந்து அடிக்கடி சந்திக்கலாம். இதனால் நீங்கள் அவர்களை பொழுதுபோக்கிற்காக வெளிய கூட்டி செல்ல வேண்டியதிருக்கும். இது உங்களது செலவை அதிகரிக்கும். நேரமும் விரயமாகும்.
அக்டோபர் 2018ற்கு மேல் பயணம் சாதகமாக இருக்காது. பயணத்தில் அல்லது பயணத்தால் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். இதனால் அதிக பதற்றம் மற்றும் மன அமைதி இன்றி காணப் படுவீர்கள். தொழில் குறித்த பயணம் வெற்றி தருவது சந்தேகமே. மேலும் புது ப்ராஜெக்ட் கிடைப்பதும் சந்தேகமே.
நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் உங்களுக்கு விசா சம்பந்தமான சிக்கல்கள் வரக் கூடும்.இதனால் நீங்கள் அக்டோபர் 2018ற்கு மேல் தாய் நாடு திரும்பக் கூடும். நீங்கள் வெளி நாடு செல்ல நேர்ந்தால், உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து, ஜோதிடரின் ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது உத்தமம்.
Prev Topic
Next Topic