2018 புத்தாண்டு வேலை / உத்யோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வேலை / உத்யோகம்


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த 2018ஆம் வருடம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எனினும் செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்கள் உத்தியோகம் பாதுகாப்பாக இருக்கும். எனினும் அதற்க்கு உங்கள் ஜெனம் ஜாதகமும் சாதகமாக இருக்கும். உங்களது வேலையின் அழுத்தமும் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும்.
பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ எதிர் பார்க்க முடியாது. கடினமாக உழைத்தால் மட்டுமே உங்களுக்கு சன்மானம் ஏதேனும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களது மேலாளர் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும் என்றும் விரைந்து கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் எதிர் பார்ப்பார். இது உங்களை சற்று முகனம் சுளிக்க அல்லது வறுத்த பட வைக்கும். எனினும் நீங்கள் கடினமாக உழைப்பதை தவிர வேறு வழி இல்லை. இந்த சூழலை நீங்கள் கடந்துதான் ஆகவேண்டும்.
மேலும் உத்யோகம் மாற்றத்திற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. எனினும் உங்களுக்கு புது வேலை கிடைக்காது என்று இல்லை. எனினும் அதனால் உங்களுக்கு பெரிதாக சம்பளத்தில் அல்லது உங்களது நிதி நிலையில் மாற்றம் ஏற்படாது. நீங்கள் வேலை நிமித்தமாக பயணம் செய்ய்பவராக இருந்தால் அது உங்களுக்கு ஒரு கடினமான காலமாகவே இருக்கும். நீங்கள் உங்களது வாடிக்கையாளரை பார்த்து வேலையை முடிக்க பல முறை பயணிக்க வேண்டியதிருக்கும். இதனால் உங்களது உற்பத்தி குறையும். மேலும் உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் இந்த சூழலை சாதகமாக எடுத்து கொண்டு அவர்கள் வளர பார்ப்பார்கள்.


நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் விசா கிடைப்பதில் பல சிக்கல்கள் எழலாம், குறிப்பாக அக்டோபர் 2018ற்கு மேல். அதனால் விசா குறித்த எந்த ஒரு முயற்ச்சியையும் ஜூலை 2018ற்குள் எடுப்பது நல்லது.



Prev Topic

Next Topic