![]() | 2018 புத்தாண்டு தொழில் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தொழில் |
தொழில்
இந்த 2018ஆம் ஆண்டு தொழிலதிபர்களுக்கு ஓர் மோசமாக காலகட்டமாகவே இருக்கும். தொடர்ந்து தொழிலை நடத்த வேண்டும் என்றால் நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி எந்த ஒரு முடிவும் எடுப்பது நல்லது. குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறினாலும் ஒரே இரவில் நேர்மறை மாற்றங்களை எதிர் பார்க்க முடியாது.
தொழிலதிபர்களுக்கு இந்த வருடம் அழுத்தம் மிகுந்ததாகவே இருக்கும்.
நீங்கள் உங்களது முக்கியமான மற்றும் நெடுங்காலமாக இருந்த வாடிக்கையாளர்களை சிறு காரணங்களுக்காக இல்லக்க நேரிடலாம். இது உங்களது வருமானத்தையும் பெரிதும் பாதிக்ககூடும். பண வரவும் உங்களது நிதி நிலையும் சற்று குன்றும். உங்களது பண தேவைகளுக்காக வங்கியில் கடன் வாங்கவும் நேரிடலாம். மேலும் அரசின் சில விதி மாற்றங்களால் உங்களது தொழிலில் சில பின்னடைவும் ஏற்படலாம். உங்களிடத்தில் வேலை பார்க்கும் தொழிலார்கள் வேலையை விட்டு நிர்க்கக்கூடும்.
சரியான நேரத்தில் எடுத்த வேலையை முடிக்க முடியாததால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டிய சூழலும் ஏற்படலாம். இது இத்தனை நாட்களாக நீங்கள் சேர்த்துவைத்த பேரையும் புகழையும் பாதிக்கக் கூடும். உங்களது இந்த சூழ்நிலையை உங்களது போட்டியாளர்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு உங்களது வாடிக்கையாளர்களை அவர்கள் கவர முயல்வார்கள்.
உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களது மனைவி அல்லது கணவனின் பெயரை சேர்த்து தொழில் செய்வது சில பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிப்பதோடு இல்லாமல் நட்டத்தையும் குறைக்க உதவும். எனினும் புது முயற்சியில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு மற்றும் முதலீட்டை தவிர்ப்பது உத்தமம். உங்களது பத்திரம் மற்றும் இதர சான்றுகள் சரியாக உள்ளதா என்று அவ்வப்போது பார்த்துக் கொள்ளுங்கள்.
சுய தொழில் செய்யோர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் சற்று கடினமாகவே உழைக்க வேண்டியதிருக்கும். எனினும் உங்களது பேர் கெடாமல் பார்த்துக் கொள்ளவைத்து மிக முக்கியம்.
Prev Topic
Next Topic