![]() | 2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கல்வி |
கல்வி
கடந்த 2017ல் நீங்கள் கல்வியில் சிறந்து செயல் பட்டிருப்பீர்கள். விரும்பிய கல்லூரியில் சேர்க்கை கிடைத்திருக்கும். எனினும் இந்த 2018ஆம் வருடம் நல்ல மதிப்பென்களை பெற கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கியமாக பொது தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். மேலும் சனி நல்ல இடத்தில இல்லாததால் பெற்றோர் அல்லது ஆசிரியர்களால் உங்களுக்கு மன அழுத்தகம் மற்றும் மன உளைச்சல் ஏற்படக்கூடும்.
நீங்கள் ஒரு தருவாயில் படிப்பில் ஆர்வத்தை இல்லக்கவும் நேரிடலாம். முக்கியமாக தவறான நட்பாள் உங்களது படிப்பில் கவனத்தை இல்லக்க கூடும். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கத்திற்கும் ஆளாகக்கூடும். தேவையற்ற நண்பர்கள் சேர்க்கையை தவிர்ப்பது நல்லது. இந்த சமையத்தில் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது உங்களை சரியான வழியில் வழி நடத்தி செல்ல உதவும். மேலும் நீங்கள் உங்களது நண்பர்களுடனும் சண்டை போடவும் கூடும். உங்களது உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது அதிக கவனும் வேண்டும்.
Prev Topic
Next Topic